×

இளம்பெண்ணை நடுரோட்டில் மானபங்கப்படுத்திய விவகாரம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தொழிலதிபர் சிறையில் அடைப்பு: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரத்தில் இளம்பெண்ணை நடுரோட்டில் மானபங்கப்படுத்திய தொழிலதிபர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ஜமீன் பல்லாவரம், மலைமகள் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (40), தொழிலதிபர். சொந்தமாக 4 லாரிகள் வைத்து, கல்குவாரிக்கு வாடகைக்கு விட்டு வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் முத்துக்குமார்,  பொற்கரசிக்கு பணம்  கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தான் கொடுத்த பணத்தை இளம்பெண்ணிடம் முத்துக்குமார் கேட்டுள்ளார். ஆனால், இளம்பெண் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை மறித்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், அப்படியானால் எனது ஆசைக்கு இணங்கு என்று கூறி, இளம்பெண் ஆடையை பிடித்து இழுத்து நடு ரோட்டில் வைத்து அடித்து உதைத்து அவமானப்படுத்தி உள்ளார். இதனால் அலறி துடித்த இளம்பெண், இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட முத்துக்குமாரை கைது செய்தனர். அவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணை நடு ரோட்டில் அடித்து உதைத்து மானபங்கப்படுத்திய வழக்கில் தொழிலதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Businessman , making, young woman ,Abuse Act,Pallavaram riots
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்