×

கனடாவில் வேலை வாங்கி தருவதாக இன்ஜினியர்களிடம் 56 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை: கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக 15 இன்ஜினியர்களிடம் 56 லட்சம் பெற்று ஆர்மோனியா நாட்டிற்கு அனுப்பிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருமுல்லைவாயில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த இன்ஜினியர் கார்த்திகேயன் (34) புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார் (38). இவர் சென்னை அண்ணாநகரில் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நண்பர்கள் மூலம் எனக்கு வினோத்குமார் அறிமுகமானார். அப்போது நான் கனடா நாட்டிற்கு வேலைக்கு செல்ல ேவண்டும் என்று கூறினேன். அதற்கு வினோத்குமார் மற்றும் அவரது மனைவி மற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் ராஜ் (45), பிரின்ஸ் (40) ஆகியோர் கனடாவில் நாங்கள் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.இதற்காக என்னிடம் 10 லட்சம் பணம் பெற்றனர். அதேபோல், 14 பேர் கனடா நாட்டிற்கு செல்ல 10 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் வாங்கினர். ஆனால் சொன்னப்படி வினோத்குமார் எங்களை கனடாவுக்கு அழைத்து செல்லாமல், ரஷ்யா அருகில் உள்ள அர்மோனியா மற்றும் கம்போடியா நாட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.

ஆனால் கடைசி வரை எங்களை கனடா நாட்டிற்கு அழைத்து செல்ல வில்லை. பிறகு வினோத்குமார் 15 பேரையும் அந்தந்த நாடுகளில் தவிக்க விட்டுவிட்டு ெசன்னை வந்துவிட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த 15 பேரும் சொந்த செலவில் சென்னை திரும்பினோம். எனவே, கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக வெறு ஒரு நாட்டிற்கு அழைத்து சென்று 56 லட்சம் மோசடி செய்த வினோத்குமார், அவரது மனைவி மற்றும் 2 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  அப்போது 10ம் வகுப்பு மட்டும் படித்துள்ள வினோத்குமார் தனது மனைவுடன் சேர்ந்து அண்ணாநகரில் அலுவலகம் தொடங்கி பட்டதாரி வாலிபர்களிடம் பேச எம்சிஏ முடித்த ராஜ் மற்றும் பிரின்ஸ் ஆகியோரை வேலைக்கு அமர்த்தி மோசடி ெசய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட வினோத்குமார், ராஜ், பிரின்ஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்குமாரின் மனைவியை தேடி வருகின்றனர்.



Tags : employers ,Canada ,engineers , Getting , job , Canada,engineers,fraud
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்