×

காந்தி பிறந்த நாளில் டாஸ்மாக் விடுமுறை

சென்னை: சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களில் நடத்தப்படும் பார்கள், எப்எல் 3 உரிமம் ெகாண்ட ஓட்டல்களில் நடத்தப்படும் பார்கள் மற்றும் எப்எல் 3 (ஏஏ) மற்றும் எப்எல் 11 உரிமம் ெகாண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.  தவறினால், மதுபான விதிப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : holiday ,Tasmanian ,birthday ,Gandhi ,Gandhi TASMAC Vacation , birthday f,Gandhi, TASMAC, Vacation
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!