×

உள்ளகரம் பகுதியில் மாணவிக்கு டெங்கு

ஆலந்தூர்: உள்ளகரத்தில் கல்லூரி மாணவிக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளகரம், குபேர முனுசாமி தெருவை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி, கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது மாணவிக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.இதனை அடுத்து உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்த  பெருங்குடி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளகத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அப்பகுதி முழுவதும் துப்புரவு பணியாளர்களை கொண்டு பினாயில் ஊற்றியும், பிளீச்சிங் பவுடர் தூவியும், சுகாதார பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி  சார்பில் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்து மாத்தரை மற்றும்  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.உள்ளகரம் பகுதியில் முறையாக துப்புரவு பணி நடைபெறாததால், எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. கால்வாய்களில் அடைப்பு மற்றும் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு போன்ற காரணங்களால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவ ஏதுவாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

Tags : city ,Student ,Inner City Area , inner city, Dengue , student
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு