×

கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சி பெரும்பான்மை திரட்ட இஸ்ரேல் பிரதமர் தீவிரம்

ஜெருசலம்: இஸ்ரேலில் ஆட்சி அமைக்க 28 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு 2வது முறையாக சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 120 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், பென்னி கன்ட்ஸின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களை பிடித்தது. பிரதமர் நெதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 31 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால், கூட்டணி அரசு அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

கூட்டணி ஆட்சியில் நெதன்யாகு பிரதமராக வேண்டும் என 55 பேர் ஆதரவாக உள்ளனர்,  பென்னி கன்ட்ஸ் பிரதமராக 54 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பிரதமர் நெதன்யாகு பெரும்பான்மையை நிருபிக்க, அதிபர் ரிவ்லின் 28 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை என்றால், பென்னி கன்ட்ஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படும். இவராலும் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை என்றால், வேறு ஒரு எம்.பி.க்கு வாய்ப்பு அளிக்கப்படும். அப்படியும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், 3வது முறையாக தேர்தல் நடத்த அதிபர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. இதனால் தனது தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையை திரட்டு் முயற்சியில் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக இறங்கியுள்ளார்.


Tags : Israeli ,coalition regime , coalition regime, majority, Israel's premier, intensity
× RELATED இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி