×

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா?: மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையை போக்கும் முயற்சிகளில் ஒன்றாக, பெரு நிறுவனங்களுக்கு அதிரடி வரிச்சலுகையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதுபோல், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுவது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:  வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு 2.5 லட்சமாக இருந்தது. உச்சவரம்பை மாற்றாமல், ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இதுபோல், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உரிய காலத்தில் பரிசீலனை செய்து அறிவிக்கப்படும் என்றார்.  பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு குறித்து கேட்டதற்கு, ‘‘அனைத்து வகையிலும் ஆராய்ந்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். இதனால் வங்கி மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பினரும் பலன் அடைவார்கள்’’ என்றார்.




Tags : Union Minister ,The Union Minister , Income tax exemption. Union Minister.response
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...