×

தொடர்ச்சியாக 7வது வெற்றி கயானா வாரியர்ஸ் கலக்கல்

செயின்ட் லூசியா: கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸூக்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. கோலின் கிராண்ட்ஹோம் 65 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), இங்ராம் 25, பார்ன்வெல் 23, பிளெட்சர் 18 ரன் எடுத்தனர்.கயானா பந்துவீச்சில் லாப்ளின் 3, இம்ரான் தாஹிர் 2, ஷெப்பர்டு 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய கயானா வாரியர்ஸ் 18.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஹேம்ராஜ் 33 ரன், ஹெட்மயர் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பிராண்டன் கிங் 81 ரன் (59 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஷோயிப் மாலிக் 30 ரன்னுடன் (28 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்திய கயானா அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (9), செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் (8) அடுத்த இடங்களில் உள்ளன.

Tags : Guyana Warriors ,win ,Guyana Warriors Blend , Guyana Warriors, blend , 7th consecutive, win
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...