கால் இறுதியில் காஷ்யப்: கொரியா ஓபன் பேட்மின்டன்

இன்ச்சியான்: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் மலேசியாவின் டேரன் லியூவுடன் நேற்று மோதிய காஷ்யப் 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டிக் கடும் நெருக்கடி கொடுத்த டேரன் லியூ 21-11 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.இதில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த காஷ்யப் 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 56 நிமிடத்துக்கு நீடித்தது. காஷ்யப் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>