பள்ளி அணிகளுக்கான ‘ஸ்கூலிம்பிக்ஸ்’ அறிமுகம்

சென்னை: மாநில அளவில் பள்ளி அணிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டித் தொடர் ‘ஸ்கூலிம்பிக்ஸ்’ சென்னையில் நேற்று அறிமுகமானது.முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 9ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டங்கம், எஸ்டிஏடி நீச்சல் வளாகம் மற்றும் எஸ்டிஏடி ஹாக்கி அரங்கில் நடைபெறும். இந்த தொடரில் பேட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், தடகளம், நீச்சல், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.கடைசி நாளான அக். 13ம் தேதி 5 கிமீ மற்றும் 10 கிமீ மாரத்தான் ஓட்டப் பந்தயமும் நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் மூலம் திரட்டப்படும் நிதி சிறந்த வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களின் பயிற்சி, திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.Tags : Introduction ,School Olympics ,school teams , Introduction, School Olympics, School teams
× RELATED ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற வசதி: விரைவில் அறிமுகம்