தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் பிளிஸ்கோவா

தாஷ்கன்ட்: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.கால் இறுதியில் ஸ்லோவகியாவின் விக்டோரியா குஸ்மோவாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். பெல்ஜியம் வீராங்கனை அலிசான் வான், ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டீ, கடாரினா ஸவட்ஸ்கா (உக்ரைன்) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.வுஹான் ஓபன்: சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா), அரினா சபலென்கா (பெலாரஸ்), பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


Tags : Tashkent Open Tennis Half ,Piliskova , Tashkent ,Open Tennis, Piliskova
× RELATED அரை இறுதியில் பிளிஸ்கோவா