சர்வதேச ஹாக்கி பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

பிரஸல்ஸ்: பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது.பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நேற்று இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய அணி சார்பில் மன்தீப் சிங் 39வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 54வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். அடுத்து ஸ்பெயின் அணிக்கு எதிராக செப். 28, 29 தேதிகளில் விளையாடும் இந்திய அணி, அக்டோபர் 1, 3 தேதிகளில் மீண்டும் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories:

More
>