×

சத் நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 30 தொழிலாளர் பலி?

நட்ஜமீனா: சத் நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில், 30 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சத் நாட்டில் லிபியான் எல்லை அருகே சட்ட விரோதமாக தங்கச் சுரங்கம் இயங்கி வந்தது. இது நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில், சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏராளமான ஊழியர்கள்  இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். விபத்து நடந்தது  மிகச்சிறிய நகரம் என்பதால் மீட்பு பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலைதான் ராணுவ மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் வரை இறந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து குறித்து பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் மகமத் அபாலி சலா கூறுகையில், “சுரங்க விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று திட்டவட்டமாக கூற இயலாது. இறப்பு அதிகமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி” என்றார்.


Tags : Country ,gold mining collapse , country ,gold mining , killed?
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!