×

கசோகி கொலைக்கு பொறுப்பேற்கிறேன்: சவுதி இளவரசர் சல்மான் ஒப்புதல்

ரியாத்: பத்திரிகையாளர் கசோகி கொலை செய்யப்பட்டதற்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையின் கட்டுரையாளராக இருந்தவர் ஜமால் கசோகி. இவர்  சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார்.  தனது திருமண ஆவணங்களை பெறுவதற்காக கடந்தாண்டு அக்டோபரில்  துருக்கி  தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு இவர் சென்றார். பின்னர், அவர் மாயமானார். சவுதி தூதரகத்தில் கசோகி கொல்லப்பட்டதாக  துருக்கி அரசு தெரிவித்தது.  இந்த கொலைக்கு சவுதி அரசுதான் காரணம் என்றும் கூறியது.

ஆனால், கசோகி கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என சவுதி அரேபியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில்,  கசோகி  கொலை தொடர்பாக அமெரிக்காவின் பொது ஒளிரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்ட்டின் ஸ்மித் என்பவர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை பேட்டி எடுத்துள்ளார். அதில், கசோகி ெகாலைக்கு தான் முழு பொறுப்பேற்பதாக சல்மான் தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர், “ ககோசி கொலை எனது கண்முன் தான் நடந்தது. நானே இதற்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன்.  ஏனெனில், இந்த சம்பவம் எனது கண்முன்தான் நடந்தது,” என்று தெரிவித்துள்ளார். கசோகியின் முதலாம் ஆண்டு நினைவு தினமான அக்டோபர் 1ம் தேதி, சல்மானின் இந்த முழு பேட்டியும் ஒளிபரப்பப்பட உள்ளது.


Tags : murder ,Saudi Prince Salman ,Kasogi ,Kazuki In Charge , murder ,Kazuki,approval, Saudi Prince Salman
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...