×

ஹாக்கி, மல்யுத்த வீரர்கள் பாஜ.வில் இணைந்தனர்

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், அகாலிதள எம்எல்ஏ பால்கவுர் சிங் ஆகியோர் பாஜ.வில் இணைந்தனர். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை பாஜ விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற அரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின்  ேகப்டன் சந்தீப் சிங்,அகாலிதள எம்எல்ஏ பால்கவுர் சிங் ஆகியோர் ேநற்று அரியானா மாநில பாஜ தலைவர் சுபாஷ் பர்லா முன்னிலையில் அக்கட்சியில்  இணைந்தனர். இவர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.



Tags : wrestlers ,BJP , Hockey, wrestlers, Joined ,BJP
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...