×

சட்ட மாணவி கைது விவகாரம் இதுதான் பா.ஜ.வின் நீதியா?: பிரியங்கா கேள்வி

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது பலாத்கார புகார் அளித்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இந்த புகாரில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சின்மயானந்தாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இந்த மாணவி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘உன்னாவ் பலாத்கார கொலை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார். பெண்ணின் மாமா கைது செய்யப்பட்டார். 13 மாதம் மக்கள் கொடுத்த அழுத்தத்துக்குப்பின், குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை கொல்ல முயற்சி நடந்தது. ஷாஜகான்பூர் பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் கைது. அப்பெண்ணின் தந்தைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. குற்றவாளி பாஜ தலைவர் மீது இன்னும் பலாத்கார குற்றம் சுமத்தப்படவில்லை. இதுதான் பாஜ.வின் நீதியா?’ என்று கேட்டுள்ளார்.

Tags : BJP ,arrest ,law student ,Priyanka The BJP , Law student, arrested, BJP, Priyanka
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...