×

87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட சந்தேக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்ய அவகாசம்

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கத்தின்போது 87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து இறுதி தணிக்கை செய்ய, வருமான வரித்துறைக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பழைய 500 மற்றும் 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதன்பிறகு அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற அவகாசம் தரப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, வருமானவரித்துறைக்கு தகவல்கள் தரப்பட்டன.  இது தொடர்பாக சுமார் 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. இதில் 87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் சந்தேகத்துக்கு இடமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.

 கருப்பு பணத்தை மாற்ற இந்த பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதா எனவும், நிறுவன கணக்கு வழக்கு விவரங்களை ஆராயவும் வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கடந்த ஜூன் 30 வரை வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இறுதி அவகாசமாக மேலும் 3 மாதம் நீட்டித்து, டிசம்பர் 31க்குள் தணிக்கைைய முடிக்க வேண்டும் என வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : companies , 87,000 companies, audit , tax department
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...