×

கிருஷ்ணா கால்வாய் சீரமைக்கப்படாததால் கண்டலேறு அணையிலிருந்து 6 நாளில் நீர் ஜீரோ பாயின்டை வந்தடையுமா?

சென்னை:  ஆந்திர - தமிழக பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் புதர்கள் மண்டியும் சேதடைந்தும் காணப்படுகிறது. இதனால் 6 நாளில் கண்டலேறு நீர் ஜீரோ பாயின்டை வந்தடையுமா என்பது சந்தேகம் என்கின்றனர் பொதுமக்கள். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திரா ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஆந்திர அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்த தவணை காலத்தில் தண்ணீர் திறக்க கோரி தமிழக பொதுப்பனித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் கண்டலேறுவில் போதிய அளவு  தண்ணீர் இல்லை என  கூறி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு  மறுத்து விட்டது.

இந்நிலையில் தென்மேற்கு பரும மழை தாக்கம் காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது .இந்த மழை காரணமாக ஆந்திர அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.  கண்டலேறு அணையில் தற்போது 13 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஆந்திர அரசை தண்ணீர் திறக்க  கேட்டுக்கொண்டதின் பேரில் கண்டலேறு அணையில் 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு  திறந்து விடலாம்.   இதனால்  நேற்று முன்தினம் ( 25ம் தேதி ) ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் 6 நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்கு  வந்தடையும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில பகுதிகளான வரதயபாளையம், கடூர், சின்ன பாண்டூர், சத்தியவேடு, ஜீரோ பாயின்ட் நுழைவு வாயில்  போன்ற பகுதிகளில் கிருஷ்ணா கால்வாயில் புதர்கள் மண்டி கிடக்கிறது, மேலும் தமிழக பகுதிகளான தொம்பரம்பேடு, அம்பேத்கர் நகர், அனந்தேரி ஆகிய பகுதிகளில் கால்வாயின் சிமென்ட் கால்வாய் சேதமடைந்து பெயர்ந்து கிடக்கிறது,  அனந்தேரி பகுதியில் கால்வாயின் சிலாப்புகள் பெயர்ந்தும் கரைகள் சரிந்தும் ஓடை போல் காணப்படுகிறது  இதனால் பொதுபணித்துறை அதிகாரிகள்  தெரிவித்த 6 நாட்கள் காலக்கெடுவுக்குள் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து சேறுமா என்பது கேள்விகுறியாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

சில பகுதிகள் மட்டுமே சீரமைப்பு
கிருஷ்ணா தண்ணீர் வருகையையொட்டி கடந்த 12ம் தேதி அன்று கிருஷ்ணா கால்வாய் ஜீரோ பாயின்ட் பகுதி மற்றும் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் பகுதி என ஒரு சில இடங்களில் மட்டும் கால்வாயை சீரமைத்தனர். மற்ற பகுதிகளை அப்படியே விட்டுவிட்டனர். மேலும் அதிகாரிகள் பார்வையிடும் பகுதிகளை மட்டுமே சீரமைத்தனர்.

Tags : Krishna Canal ,Zero Point ,Kandurata Dam ,Kantharan , Krishna Canal, Continental Dam, Zero Point
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு