×

மக்களுக்கு பல்லாண்டு சேவை புரிய வேண்டும்: மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நாட்டு மக்களுக்கு இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தனது டிவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்திலும், அரசியலிலும், அவரது தலைமைத்துவ பண்புகளால் நமது நாடு தொடர்ந்து பலனடைந்து வருகிறது. இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் எனும் எனது விழைவினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : birthday ,MK Stalin ,Manmohan Singh , People, Manmohan Singh, MK Stalin
× RELATED கலைஞர் பிறந்தநாளில் மக்களுக்கு உதவி...