×

ரத்த அழுத்தம் குறைந்து வருவதால் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு தீவிர சிகிச்சை: தனி மருத்துவக்குழு அமைப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு, ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கினார். அவர், கடந்த  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர்களுக்காக அவர்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்று கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் கடந்த செவ்வாய்கிழமை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இரண்டாவது முறையும் சோதனை செய்யப்பட்டதுபோது அதிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாகவும், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

The post ரத்த அழுத்தம் குறைந்து வருவதால் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு தீவிர சிகிச்சை: தனி மருத்துவக்குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : I.R. PA ,Chennai ,IAS ,Corona ,Rajiwkandi Government Hospital ,I.M. PA ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான...