×

கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் மார்த்தாண்டத்தில் 5 பேர் கைது: கம்ப்யூட்டர் பறிமுதல்: சர்வதேச கும்பலுடன் தொடர்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில்  கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கும்பல் கைது  செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்  மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஏஎஸ்பி  சாஸ்திரி மேற்பார்வையில் 5 பேர்  கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர். மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த  ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருவரம்பு பகுதியை  சேர்ந்த ஜேக்கப்(46) என்பதும் கள்ளநோட்டுகள் ைவத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின்படி மணவாளக்குறிச்சியை சேர்ந்த பூசாரி  ஷிபுசாமி(47), கிறிஸ்டின் ஜெயசேகர்(39), கேரளாவை சேர்ந்த சவுத் ஆகிய 3 பேரை பிடித்தனர்.

இவர்களில், சவுத் மூளையாக செயல்படுவதும்,  பனச்சமூடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மூலம் கள்ளநோட்டுகள் சப்ளை  செய்யப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் 77 ஆயிரம் மதிப்பிலான ₹200, ₹500  கள்ள நோட்டுகள் கட்டுகட்டாக இருந்தது. மேலும் கள்ள  நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் கருவிகளையும்  பறிமுதல் செய்தனர். இதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இவர்கள் பெரிய நெட்வொர்க் அமைத்து கள்ளநோட்டு வினியோகித்து வந்ததுடன், போதை பொருள் கடத்தல் தொழிலையும் செய்துள்ளனர். இவர்களில் சவுத் 10 மொழிகள்  பேசும்திறன் உள்ளவர். இவர் மீது கேரளாவில் பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இவருக்கு மும்பையை ேசர்ந்த சர்வதேச போதை பொருட்களை கடத்தும் கும்பலுடன் தொடர்பு  இருந்துள்ளது. இதையடுத்து சவுத், மணிகண்டன், ஷிபுசாமி, கிறிஸ்டின் ஜெயசேகர், ஜேக்கப் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : gang ,Marthanda ,arrests , Counterfeiters, martyrdom, 5 persons arrested, computer confiscation
× RELATED போதைப்பொருள் வழக்கில் கைதான...