×

‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 120 கோடி மோசடி: பிரபல தயாரிப்பாளர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நீலகண்ட் நாராயணபூர் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ‘லைகா’ நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐங்கரன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் கருணாமூர்த்தி இருந்து வருகிறார்.  இதனால் லைகா நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் அவர் தான் செய்து வந்தார்.

ஒரு படத்தை தயாரித்தால் அதற்கு நிதி ஒதுக்குவது, நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஊதியம் நிர்ணயிப்பதும் இவர் தான் செய்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்பனை செய்ததில் அவரும் அவருக்கு உதவியாக இருந்த பானு என்ற பெண்ணும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். அதேபோல் கடந்த 2018ம் ஆண்டு லைகா நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படத்தை தயாரித்து நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.  அதோடு இல்லாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு லைகா நிறுவனத்தின் எந்த அனுமதியும் இல்லாமல் ரூ.25 கோடி பணம் பரிமாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டால் முறையாக பதில் இல்லை. எனவே தயாரிப்பாளர் கருணாமூர்த்தியை கைது செய்து லைகா நிறுவனத்துக்கு சேர வேண்டிய ரூ.120 கோடி பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

Tags : cinema production company ,office ,Police commissioner ,Leica ,office lodges ,film production company , Film Liaison Company, Fraud, Celebrity Producer, Police Commissioner's Office, Complaint
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு