×

புனேவில் தொடரும் கனமழை: 13 பேர் உயிழப்பு... வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு தீவிரம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் தொடரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புனே மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்து சம்பவங்கள் காரணமாக 9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம் 10500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர். மழை தற்போது ஓய்ந்தாலும் சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இதனால் புனேயில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.கனமழையை அடுத்து புனே நகர், புராந்தர், பராமதி, போர் மற்றும் ஹாவேலி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.


Tags : Pune ,floods ,disaster recovery , Pune, heavy rain
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...