×

தனது மகன் டாக்டராக வேண்டும் என ஆள்மாறாட்டம் செய்தோம்: தந்தையின் ஒப்புதலையடுத்து உதித்சூர்யா, வெங்கடேசன் ஆகியோர் கைது

கோவை: நீட் தேர்வு,ஆள்மாறாட்டம்,தந்தை ஒப்புதல்,உதித்சூர்யா,வெங்கடேசன்,கைது,சிபிசிஐடிநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் அளித்துள்ளனர். தனது மகன் டாக்டராக வேண்டும் என பின்விளைவுகள் தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்து விட்டதாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் உதித்சூர்யா மற்றும் வெங்கடேசன் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், சிபிசிஐடி தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு மாணவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று திருப்பதியில் மாணவரும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து உதித் சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ், தாயார் கயல்விழி ஆகியோர் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். முகத்தை மூடியபடி வேனில் இருந்து இறங்கிய மூவரும், உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஷ் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்குப் பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், கல்லூரி தலைவர் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் மீது ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் நடந்ததை உதித்சூர்யா தந்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் நடத்திய தரகர்கள் குறித்தும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Udithsuriya ,Venkatesan ,doctor , Need selection, impersonation, father consent, Udithsurya, Venkatesan, arrest, CBCID
× RELATED சாலையில் நாய் குறுக்கே வந்ததால்...