×

அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை ராணுவப் பயிற்சி

அமெரிக்கா: அமெரிக்க மற்றும் ஜப்பான் படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையோரம் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மலபார் 2019 என்னும் முத்தரப்பு கடல்சார் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஏவுகணைப்போர் கப்பல் ஐ.என்.எஸ் சகாயத்ரி, நீர்முழ்கி போர் கப்பல் ஐ.என்.எஸ். கில்டன் மற்றும் நீண்ட தூர கடல் ரோந்து கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக ஜப்பானில் சசெபோவுக்கு இந்திய போர்கப்பல்கள் நேற்று சென்றடைந்தன.

அமெரிக்காவின் இஸூமோ வகை ஹெலிகாப்டர் அழிக்கும் ஜே.எஸ்.காஹா, ஏவுகணை அழிப்பான்கள் ஜே.எஸ்.சமிதரே, சவுக்காய் மற்றும் நீண்ட தூர ரோந்து கப்பலும் ஜப்பானின் நீர் முழ்கி கப்பல் மற்றும் ரோந்து கப்பலும் இந்த கடல்சார் பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்தியா-ஜப்பான்-அமெரிக்க கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் கடல் எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Indian Navy Army ,Forces ,US ,Japanese , Indian Navy,Army,Training, US , Japanese Forces
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!