×

இந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் பிரதமர் மோடி மற்றும் தோனி: 7-இடத்தில் விராட் கோலி

புதுடெல்லி: இந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பெற்றுள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் அதிகம் பாராட்டப்படும்  ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை யுகவ் என்ற நிறுவனம் நடத்தியது. நாடுகள் வாரியாகவும், உலக வாரியாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  41 நாடுகளில் இருந்து 42,000 பேர் உலகில் மிகவும் போற்றப்பட்டவர்களின் பட்டியலை உருவாக்கினர், இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரண்டு தனித்தனி பிரிவுகள் உள்ளன.

இந்த பட்டியலில் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 15.66 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி 8.58 சதவீதம் பெற்று இருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏழாவது இடத்தில் உள்ளார். தோனியின் ஓய்வு குறித்து பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தியர்களால் அதிகம் போற்றப்படும் பட்டியலில் மோடிக்கு அடுத்த இடத்தை தோனி பெற்றிருக்கிறார்.

அதேபோல் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (10.36 %) முதல் இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து கிரண்பேடி (9.46 %), லதா மங்கேஷ்கர் (9.23 %) சுஷ்மா சுவராஜ் (7. 13%) தீபிகா படுகோன் (6.35 %) உள்ளனர். உலக அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தையும், பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

Tags : Modi ,Dhoni ,Virat Kohli ,men ,India ,Tony , Men of appreciation: Prime Minister Modi, Dhoni, Virat Kohli
× RELATED முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி...