லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனை

இங்கிலாந்து: லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி சுபாஷினி சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி. இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். பார்வை குறைபாடு உடைய இந்த பெண் சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கியபடி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடிய சுபாஷினி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது தொடர்பாக சுபாஷினி கூறுகையில்; வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன்; பாரா ஜூடோ போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்தேன் என கூறியுள்ளார்.


Tags : student ,Commonwealth Games ,London ,Tamil Nadu , Commonwealth Competition, Gold, Subashini
× RELATED பள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது