×

பூமரத்தூர் அரசு பள்ளியில் இடிந்து விழும் அபாய நிலையில் சுற்றுசுவர்

தர்மபுரி: பூமரத்தூர் அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் வத்தல் மலை அருகே நல்லம்பள்ளி தாலுகா தின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூமரத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியின் நுழைவு வாயில் சுற்றுசுவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது.

இதை சீரமைக்கப்படாமல் விட்டதால் சுவர் மேலும் விரிசல் ஏற்பட்டு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை கொடுத்திருந்தும் இதுவரை விரிசல் ஏற்பட்ட சுற்றுசுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு பூமரத்தூர் தொடக்கப்பள்ளியின் சுற்றுசுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Boomerangur Government School ,Government School , Government School
× RELATED 70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு...