இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க வரும்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிபர் ரியுவன் ரிவ்லின் அழைப்பு

ஜெருசலேம்: இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க வரும்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிபர் ரியுவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிகுத் கட்சி உள்பட எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் பிரதமர் நெதன்யாகுவை புதிய அரசு அமைக்க வரும்படி அதிபர் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசு அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக 2 நாள்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது 55 எம்.பி.க்கள் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இணைய ஒப்புக் கொண்டதாகவும் ரிவ்லின் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஜின் ப்ளு வொயிட் கட்சியும், லிகுத் கட்சிக்கு இணையாக வெற்றி பெற்றுள்ளது. கான்ட்ஜுக்கு 54 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எனினும், 10 பேர், அரேபிய யூதர்கள் ஆவர்.

கான்ட்ஜ் தலைமையிலான கூட்டணி அரசில் சேர மாட்டோம் என தெரிவித்து விட்டனர். இந்நிலையில் புதிய அரசு அமைக்க வரும்படி அதிபர் விடுத்த அழைப்பை நெதன்யாகுவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் தேர்தல் சட்டத்தின்படி, 28 நாள்களில் நெதன்யாகு அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில்  தோல்வியடையும் பட்சத்தில் கால அவகாசத்தை 2 வாரங்களுக்கு நீடிக்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கலாம் என கூறப்டுகிறது. அப்போதும் நெதன்யாகுவால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லையெனில், வேறு அரசியல் கட்சிக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>