×

கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர்

கரூர்: கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி பகுதியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சமூக ஆர்வலர் முகிலன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் முகிலனை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று மதியம் கரூர் ஜேஎம்-1 கோர்ட்டில் முகிலனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்கார்த்திக், அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 1ம்தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து, முகிலனை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags : Mukhilan Azar ,Karur Court , Mukhilan Azar , Karur Court
× RELATED மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமூக போராளி முகிலன் ஆஜர்