×

விமானப்படை பயிற்சி விமானம் நொறுங்கி விபத்து

புதுடெல்லி:  விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் குவாலியர் அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். மத்தியப் பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிக்21 ரக பயிற்சி விமானம் ஒன்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதில் இரண்டு விமானிகள் இருந்தனர். பிந்த் மாவட்டத்தில் சவுத்ஹர்காபுரா பகுதியில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அவசரக்கால வெளியேறுதல் நடவடிக்கை மூலம் அதில் இருந்த விமானிகள், விமானத்தில் இருந்து வெளியேறி தப்பினர். விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Air Force ,training plane crash ,pilots ,Gwalior ,crashes , MiG-21 crashes, Gwalior, both pilots safe
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...