×

ரயில்வே தனியார் மயத்தை கைவிட வேண்டும் : டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை:  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்த போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் தனியார் வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : DTV Railways ,TTV , Railways should abandon ,private life, TTV
× RELATED மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு