×

வடபழனி பேருந்து நிலையத்தில் தொடரும் உயிர் பலி மாநகர பேருந்து மோதியதில் மருத்துவமனை பெண் ஊழியர் பலி: பஸ்சை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற டிரைவர்

சென்னை: வடபழனி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் மீது பஸ் மோதியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு பேருந்து நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மீனா(50). இவர் வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வடபழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, மாநகர பேருந்து ஒன்று வடபழனி பணிமனை பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மீனா மீது பேருந்து மோதியது. இதில் மீனா படுகாயமடைந்த ரத்த வெள்ளத்தில் துடித்தார்.  இதை பேருந்து ஓட்டுனர் கவனிக்காமலேயே பேருந்தை இயக்கி கொண்டு ெசன்று விட்டார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மீனாவை பொதுமக்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.இதையடுத்து வடபழனி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு ெசய்து வடபழனி பேருந்து நிலையம் முன்பு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, வடபழனி பணிமனையை சேர்ந்த 570வி மாநகர பேருந்து என்றும், வடபழனியில் இருந்து கேளம்பாக்கம் செல்லும்போது பேருந்து நின்று கொண்டிருந்த மீனா மீது மோதிவிட்டு சென்றது தெரியவந்தது.அதைதொடர்ந்து அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை ேசர்ந்த மாநகர பேருந்து நடத்துனர் முருகானந்த குமரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் பணிமுடிந்து சொந்த ஊரான செய்யாறு ெசன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இரவு நேரத்தில் வடபழனி பேருந்து நிலையத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இது போன்ற விபத்துகள் நடந்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை வடபழனி பஸ் டெப்போவில் பழுதான பஸ்ைச எடுக்க முயன்றபோது பஸ் ஓய்வறை சுவற்றின் மீது மோதியதில் டெக்னீஷியன் ஒருவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : hospital bus driver ,bus driver ,hospital bus employee ,Vadapalani , Continuing, Vadapalani, bus stand,bus driver,
× RELATED ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி