×

கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் : கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:   பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது.

Tags : KS Alagiri , college, Higher Education, Notice,KS Alagiri
× RELATED கல்லூரியில் சேர்ந்திருப்போம் தனியார்...