×

பாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டையில் சட்டவிரோத தங்க விற்பனை அமோகம்: .போலீசார் மெத்தனம் ,..அரசுக்கு வருவாய் இழப்பு

சென்னை: சென்னை பாரிமுனை, பூக்கடை, மண்ணடி, சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இவற்றை பிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளனர். சென்னை பூக்கடை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளான‌ பாரிமுனை, மண்ணடி, பிராட்வே, கொத்தவால் சாவடி, சவுகார்பேட்டை, யானைகவுனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி  பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை, வெளிநாட்டு பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.இதனால் பூக்கடை, பாரிமுனை, சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் இருக்கும் தனியார் விடுதிகளில் வெளிமாநிலங்களில் தங்கம், வெள்ளி வாங்க வருபவர்கள் தங்குகின்றனர். அவர்களை ஒரு ரகசிய இடத்தில் வரவழைத்து, ஒரு ரகசிய குறியீட்டுடன்  தங்கம், வெள்ளி விற்பனை மொத்தமாக நடந்து வருகிறது. இதற்கு உரிய பில்களும் வழங்கப்படுவதில்லை. இதனால் வருமானவரி துறையினருக்கு நீண்ட காலமாக பலகோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய சட்டவிரோத தங்கம் விற்பனை மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட மொத்த தங்க வியாபாரிகளிடம் இருந்து அதிகபட்ச பங்கு தொகை வந்து சேருவதாக தகவல் கூறப்படுகிறது. இதனால் இவற்றை தடுக்க  வேண்டிய பூக்கடை போலீசாரும் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்து மெத்தனமாக செயல்படுகின்றனர்.இதுதவிர, பூக்கடை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களின் நடமாட்டம், பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளது. இவற்றை தடுக்க  போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, பாரிமுனை, என்எஸ்சி போஸ் சாலை, சவுகார்பேட்டை, யானைகவுனி பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு, இதுபோன்ற முறைகேடான தங்க விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களை உடனடியாக தடுக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : barimunai ,flower shop , Parimunai, Florist, cavukarpettai, Government
× RELATED சென்னையில் பரபரப்பு; 17 பள்ளிகளுக்கு...