×

3 நாள் பயிற்சி ஆட்டம் வாரியத் தலைவர் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதல்

விசாகப்பட்டணம்: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் - தென் ஆப்ரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், விசாகப்பட்டணத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் விசாகப்பட்டணத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் தென் ஆப்ரிக்க அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் 3 நாள் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி விஜயநகரம், ஆந்திர கிரிக்கெட் சங்க  ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.

வாரியத் தலைவர் லெவன்: ரோகித் ஷர்மா (கேப்டன்), பிரியங்க் பாஞ்ச்சால், மயாங்க் அகர்வால், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஜலஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, ஆவேஷ் கான்,  இஷான் போரெல், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ். தென் ஆப்ரிக்கா: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), குவின்டான் டி காக், தியூனிஸ் டி புருயின், டீன் எல்கர், ஸுபேர் ஹம்சா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், செனூரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிஷ்  நோர்ட்ஜே, வெர்னான் பிலேண்டர், டேன் பியட், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட்.



Tags : clash ,South Africa ,training game board team , 3 day training game, Board Chair Team, South Africa
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...