×

அரசு பஸ்சில் சீட்டை ஆக்ரமித்து அடாவடி: இளம் பெண்ணுடன் 6 வாலிபர்கள் லூட்டி

* நடு ரோட்டில் மடக்கியது போலீஸ்
* தக்கலை அருகே பரபரப்பு

மார்த்தாண்டம்: தக்கலை அருகே அரசு பஸ்சில் இளம் பெண்ணுடன் லூட்டி அடித்த 6 வாலிபர்களை போலீசார் நடுரோட்டில் மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் பஸ்சின் பின் இருக்கையை வாலிபர்கள் 6 பேர் ஒரு கும்பலாக வந்து ஆக்ரமித்துக் கொண்டனர். அவர்களுக்கு நடுவே ஒரு இளம் பெண்ணும் அமர்ந்திருந்தார். அவரை பார்க்கும் போது பள்ளி, அல்லது கல்லூரி மாணவி போல காணப்பட்டார். பஸ்சில் இருந்தவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. பஸ் நாகர்கோவிலை தாண்டி வரும் போது அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை கண்காணிக்க தொடங்கினர்.

அப்போது இளம் பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இளம் பெண்ணும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாலிபரின் சில்மிஷத்தால் மகிழ்ச்சி அடைந்தது போல் காணப்பட்டார். அவர்களுடன் அமர்ந்திருந்த மற்ற வாலிபர்களும் அதை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர். அது குறித்து மற்ற வாலிபர்களிடம் பேசி சிரித்துக்கொண்டனர். இந்த சம்பவம் பஸ்சில் இருந்த பயணிகளின் முகங்களை சுழிக்க வைத்தது.
இதற்கிடையே பஸ்சில் இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் வாலிபர்களின் செயல்களை கண்காணித்த படியே வந்தார். இளம் பெண்ணை வாலிபர்கள் கடத்தி செல்கின்றார்களோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. பஸ் தோட்டியோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. உடனே ராணுவவீரர் தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட பஸ்சின் வருகைக்காக போலீசார், காவல் நிலையம் முன்பு காத்திருந்தனர். இதனால் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளின் கவனமும் வாலிபர்கள் பக்கம் திரும்பியது. இதை உணர்ந்து கொண்ட வாலிபர்கள் இளம் பெண்ணுடன் வில்லுக்குறியில் இறங்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட பயணிகள் அவர்களை இறங்க விடவில்லை. இது வாலிபர்களுக்கும், இளம் பெண்ணுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பஸ் தக்கலை காவல் நிலையத்தை நெருங்கியது. மணி கணக்கில் காதிருந்த போலீசார் பஸ்சை நடுரோட்டில் வைத்து மடக்கி பிடித்தனர். அதைத் தொடர்ந்து வாலிபர்களையும், இளம் பெண்ணையும் அழைத்து சென்றனர். அதன் பிறகு பஸ் யாருடைய தொல்லையும் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இது ஒருபுறம் இருக்க போலீசார் வாலிபர்களையும், இளம் பெண்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அனைவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இளம் பெண்ணும், சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. மற்றவர்கள் காதலனின் நண்பர்கள். இளம் பெண் குறித்து திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் ெபண் மாயம் என்ற புகாரும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தக்கலை போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள போலீசார் இளம் பெண்ணின் பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணைக்கு பிறகு அவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் தக்கலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்சின் வருகைக்காக போலீசார், காவல்  நிலையம் முன்பு காத்திருந்தனர். இதனால் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளின்  கவனமும் வாலிபர்கள் பக்கம் திரும்பியது. இதை உணர்ந்து கொண்ட வாலிபர்கள்  இளம் பெண்ணுடன் வில்லுக்குறியில் இறங்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட  பயணிகள் அவர்களை இறங்க விடவில்லை. இது வாலிபர்களுக்கும், இளம் பெண்ணுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Aadawadi ,teenagers , Government bus, young lady, young men lutty
× RELATED வீரமச்சான்பட்டியில் நாளை ஆண்களுக்கு கு.க. சிகிச்சை ஏற்பாடு