×

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் முட்புதர், சகதி, தண்ணீரில் சடலத்தை எடுத்து சென்ற அவலம்: காவேரிப்பாக்கம் அருகே வேதனை

காவேரிப்பாக்கம்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் மேம்பாலத்தில் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்கி எடுத்துச்சென்று அடக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி அபிராமச்சேரி முதல் வார்டில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதனால் ஊரின் கிழக்கு பகுதியில் சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள, சுடுகாட்டிற்கு சடலத்தை நேற்று உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

ஆனால், சாலையின் இரண்டு பக்கமும் முட்புதர்கள் மண்டி கிடந்தது. சேறும் சகதியான இந்த சாலையில் சமீபத்தில் பெய்த மழைநீர் சுமார் 2 அடி தேங்கியிருந்தது. மேலும் இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான இந்த பாதை வழியாக சடலத்தை கடும் சிரமத்துடன் எடுத்துச்சென்றனர். மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் இந்த பாதையில் மின்சார ஒயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் கீழே தொங்கியபடி உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மண்டி கிடக்கும் முள்புதர்களை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sagittarius ,Kaveripakkam ,Sahadi , Shoot, kaveripakkam, pain
× RELATED தனுசு