×

நோபலுக்கு இணையான விருதாக கருதப்படும் ஸ்வீடன் நாட்டின் வாழ்வாதார உரிமை விருதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி க்ரேடா தன்பெர்க் தேர்வு

ஸ்வீடன்: நோபலுக்கு இணையான விருதாக கருதப்படும் ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் ரைட் லைவ்லி ஹூட் விருதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி க்ரேடா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுட்டில் கடந்த திங்கள்கிழமை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற  16 வயது சிறுமி  பங்கேற்றார். அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி உலகநாட்டு தலைவர்களை நோக்கி பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் வாழ்வாதார உரிமை விருது-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுக்கு தீர்வு மற்றும் விடைகள் அளிக்க முன்வருவோரை ஆதரிக்கும் வகையிலும், அவர்களை கெளரவிக்கும் வகையிலும் ஸ்வீடன் நாட்டிலுள்ள ரைட் லைவ்லி ஹூட் அறக்கட்டளையால், ஆண்டுதோறும் விருது அளிக்கப்பட்டுவருகிறது. 2019ம் ஆண்டுக்கான ரைட் லைவ்லி ஹூட் விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார். முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு ஓராண்டுக்கு முன்பு சிறுமி க்ரேடா தன்பெர்க் தனியொரு ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

Tags : Greta Thன்பnberg ,Sweden ,Lifestyle Rights Award for Environmental Activist ,Greta Thornberg , Sweden, Lifestyle Rights Award, Environmentalist Greta Thunberg
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்