×

ஆப்கானிய சிறுவர்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

‘‘இந்த உலகத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு தகுதியில்லாத ஓர் இடம்...’’ என்று ‘யுனிசெப்’ நிறுவனம் ஆப்கானிஸ்தானைக் குற்றம் சாட்டுகிறது. அதிகப்படியான வறுமை மற்றும் வன்முறைக்குச் சாட்சியாக இருப்பது ஆப்கானிய குழந்தைகள்தான். சுமார் 46 சதவீத ஆப்கானிய மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். ஐ.நா.வின் புள்ளி விவர அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது ஏழ்மை நாடு ஆப்கானிஸ்தான்தான். ஆப்கானிய குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் 370 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 26 ஆயிரம் ரூபாய்.

ஆசிரியரின் மாத வருமானமே வெறும் 50 டாலர் தான். 70 சதவீத மக்களுக்கு குடிக்க நல்ல குடிநீர் இல்லை. இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது குழந்தைகளின் உடல் நலம்தான். அங்கே 60 சதவீத குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். பெரியவர்களில் 28 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.

அத்துடன் குழந்தைத் திரு மணம், பாலியல் தொந்தரவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சிறுவயதிலேயே மரணம் என பல இன்னல்களுக்கு  ஆளாகின்றனர் அந்தக் குழந்தைகள். அந்தளவுக்கு அங்கே பிறக்கும் குழந்தைகள் பெரும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். தீவிரவாத தாக்குதல்களுக்குக் கூட பலியாவது அப்பாவிக் குழந்தைகள் என்பது இன்னும் சோகம்.  

ல்வி, விளையாட்டு, பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவு என்று ஒரு குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய அடிப் படையான விஷயங்கள் கூட அங்கே குதிரைக் கொம்பாக இருக்கிறது. தவிர, பத்து வயதுக்குள்ளேயே பெரும்பாலான குழந்தைகள் ஏதாவது வேலைக்கு வந்துவிடுகின்றனர் அல்லது வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து விடுகின்றனர்.

அப்படி அவர் கள் பார்க்கும் வேலை கூட ரொம்பவே கொடுமையானது. குப்பை பொறுக்குதல், ஷூ பாலிஷ் போடுதல், தண்ணீர் பாட்டில் விற்பனை, கட்டடங்களில் சிமெண்ட் மூட்டை சுமத்தல் போன்றவைதான் அந்த வேலைகள். இந்த அவல நிலை இன்னும் ஆப்கானிஸ் தானில் தொடர்வதுதான் கூடுதல் துயரம்.

Tags : boys ,Afghan , Afghan boys
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...