×

பாலியல் புகாருக்குள்ளான பாஜக பிரமுகர் சின்மயானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு: கைது செய்யப்பட்ட சட்ட மாணவிக்கு சிறை

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச பாஜக பிரமுகர் சின்மயானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சட்ட கல்லூரி மாணவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா(73) மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறினார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு விசாரணை குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்தது. இந்நிலையில், சின்மயானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அந்த மாணவி சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

இந்தப் புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டாலும் 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படாமல், மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புகார் அளித்த மாணவி மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் பாலியல் புகார் கூறியதாக, புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தாம் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கோரி ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் சட்ட மாணவி மனு அளித்தார். இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்த நிலையில், நேற்று நீதிமன்றத்துக்கு வந்த மாணவியை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர்.

மேலும் இந்தப் பெண்ணுடைய நண்பர்களும், சின்மயானந்தாவிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சின்மயானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சட்ட கல்லூரி மாணவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்ட மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு ஷாஜகான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சின்மயானந்தா தொடர்ந்த பணம் பறித்தல் வழக்கில் இந்தப் பெண்ணிற்கு தொடர்பு உள்ளது என்று கடந்த வாரம் சிறப்பு விசாரணை குழு கண்டுபிடித்தது. இந்த வழக்கில் அப்பெண்ணும் அவரது மூன்று நண்பர்களும் பாலியல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக சின்மயானந்தாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Lawyer ,BJP ,Chinmayananda ,Chinmayantha ,prison law student , Sexual complaint, BJP, Chinmayananda, law student, jail
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...