×

கொட்டித் தீர்த்த கனமழையால் ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்திற்குள், மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு துவங்கி பலத்த மழை பெய்தது. 2 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. லெட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், கொடிமரம் அமைந்துள்ள பகுதி உட்பட கோயிலின் பல்வேறு பகுதியிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது. பிரகாரத்திற்குள் தேங்கிய நீரை கோயில் சுகாதார பணியாளர்கள் வெளியேற்றினர்.

Tags : Rameshwaram temple ,Rameswaram , Rameswaram, rain
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...