×

கூடலூர் அருகே சிவப்பு நிறத்தில் பெய்த மழை: மக்களிடையே பரபரப்பு

கூடலூர்: கூடலூர் அருகே மழை பெய்த போது சிவப்பு நிறத்தில் மழைநீர் இருந்துள்ளது. இது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி கிராமம் தமிழக எல்லைப் பகுதியில் அமைத்துள்ளது. இதனை ஒட்டிய கேரள மாநில எல்லைப்பகுதியான வழிக்கடவு பஞ்சாயத்துக்குட்பட்ட முண்டா மற்றும் கூவத்தி பொழில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 2 கி.மீ., சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் சிகப்பு நிறத்தில் பெய்துள்ளது. சிவப்பு நிறத்தில் பெய்த மழை நீரை பார்த்து ஆச்சரியம் அடைந்த அப்பகுதி மக்கள் அவற்றை பாத்திரங்களிலும் பாட்டில்களில் நிரப்பி வைத்து உள்ளனர்.

மழை நீர் சிவப்பு நிறத்தில் ெபய்த தகவல் காலையில் பரவியதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மழைபெய்த பகுதிக்கு சென்று அப்பகுதி மக்கள் சேகரித்து வைத்திருந்த மழைநீரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.  இந்நிலையில், இரவு நேரத்தில் இந்த மழை நீரில் நனைந்த பலருக்கு உடலில் அரிப்புக்கான அறிகுறி தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, மழைநீரின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான நிறத்தில் மழை பெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cuddalore , Cuddalore, rain
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!