×

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் 18 இந்திய நிறுவனங்கள்: மூன்றாவது இடத்தில் இன்ஃபோசிஸ்

டெல்லி: உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் 18 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனமானது 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதுதவிர டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் ஐம்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன.  

உலகின் மதிப்புமிக்க 250 நிறுவனங்கள்:
அமெரிக்காவைச் சேர்ந்த போர்ஃப்ஸ் இதழ் உலகின் மதிப்புமிக்க 250 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. நம்பகத்தன்மை, சமூக மதிப்பீடு, தரமான சேவை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய 2000 பெரிய நிறுவனங்களில் சிறந்த 250 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்டி எஃப்சி உட்பட 18 இந்திய நிறு வனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இன்ஃபோசிஸ் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. டிசிஎஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய இரண்டும் 22 மற்றும் 31 இடங்களில் உள்ளன.

82 ஆசிய நிறுவனங்கள்:
பட்டியலிடப்பட்ட 250 நிறுவனங்களில் ஆசிய நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 82 நிறுவனங்கள் இந்தப் பட்டி யலில் இடம்பெற்றுள்ளன. அதே போல் 59 அமெரிக்க நிறுவனங்கள் இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பணப்பட்டுவாடா நிறுவனமான விசா முதல் இடத்திலும், கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி இரண்டாவது இடத்திலும் உள்ளது. அந்நிறுவனங்களைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் நான்காவது இடத்திலும், பேபால் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் (6), வால்ட் டிஸ்னி(7), டொயோட்டா மோட்டார் (8), மாஸ்டர்கார்டு (9), காஸ்ட்கோ ஹோல்சேல் (10) ஆகிய நிறுவனங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

இந்திய நிறுவனங்களான டாடா ஸ்டீல் (105), எல் அண்ட் டி (115), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (117), ஹெச்டிஎஃப்சி (135), பஜாஜ் பைனாஸ் சர்வீஸ் (143), பிரமல் எண்டர்பிரைசஸ் (149), ஸ்டீல் அதா ரிட்டி ஆஃப் இந்தியா (153), ஹெச்சி எல் டெக்னாலஜிஸ்(155), ஹிண் டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (157), விப்ரோ (168), ஹெச்டிஎஃப்சி வங்கி (204), சன் பார்மா இண்டஸ் ட்ரீஸ் (217), ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (224), ஐடிசி (231), ஆசியன் பெயிண்ட்ஸ் (248) ஆகிய நிறுவனங்களும் பட்டியலில் உள்ளன. உலக அளவில் மதிப்புக்குரிய நிறுவனங்களின் பட்டியலில் 18 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டுக்கான பட்டியலில் 31-வது இடத்தில் இருந்த இஃன்போசிஸ் நிறுவனம் தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Infosys 18 Indian Companies ,Indian ,world , List of World's Most Valuable Companies, 18 Indian Companies, Third, Infosys
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...