×

பிரதமர் மோடி மற்றும் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டம்: மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவதாத திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு சேர்ந்த உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்டு 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தால் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தரான் தீரிவாதிகள் பிரதமர் மோடியின் உயிருக்கு குறி வைத்திருப்பதாக வெளிநாட்டை சேர்ந்த உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிவரவாத அமைப்பானது, 8 முதல் 10 பேர் கொண்ட சிறப்பு தற்கொலைப் படையை தயார் செய்து வருவதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த சம்ஷேர்வானி தனது கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த திட்டம் அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும், உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்கிய தலைமையகங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், ஜெய்பூர், லக்னோ உள்ளிட்ட 30 முக்கிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதன்கோட் மற்றும் உதம்பூர் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை மர்மநபர் ஒருவர் கண்காணித்து சென்றதை அடுத்து ஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டன் விமானப்படை தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி ஆரஞ்ச் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,Jaish-e-Mohammed's ,Air Force , Prime Minister Modi, Air Force Base, Attack, Jaish-e-Mohammed, Federal Government, Intelligence
× RELATED சொல்லிட்டாங்க...