×

ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 10 திவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து ஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டன் விமானப்பைட தளங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  


Tags : Militants ,Air Force ,Kashmir ,Jammu ,terrorist attacks , Terrorist attack ,Air Force bases ,Jammu and Kashmir,intelligence,alert
× RELATED தீவிரவாதிகளால் வெடிமருந்து...