×

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் அடுத்த  மணப்பாக்கம் 157வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. சென்னையிலிருந்து மாங்காடு, குன்றத்தூர், போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மணப்பாக்கம் பிரதான சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் சமீப காலமாக மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பீக் அவர்சில் இந்தமாடுகள் நடுரோட்டில் நிற்பதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.

 சில நேரங்களில் மாடுகள் சண்டையிட்டு மோதிக்கொள்ளும்போது நடந்து செல்வோர் குறிப்பாக, மாணவர்கள், வயதானோர் தடுமாறி விழும் நிலை உள்ளது. இங்கு பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு இந்த மாடுகளை விரட்டுவேதே பெரிய வேலையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க சாலையில் திரியும் இந்த மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : road accidents ,Motorists , Road accidents, Motorists ,injuries
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...