×

பி.வி. சிந்துவின் கொரிய பயிற்சியாளர் திடீர் விலகல்

நியூடெல்லி: பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் கொரிய பயிற்சியாளர் கிம் ஜி ஹுயூன் திடீரென விலகியுள்ளார்.தென் கொரியாவை சேர்ந்த  கிம் ஜி ஹுயூன்(45). அவரை  இந்த ஆண்டு ஆரம்பித்தில் சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளராக  இந்திய பேட்மின்டன் சங்கம் நியமித்தது. அவரது சீரிய பயிற்சியின் கீழ்  கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில்  நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்நிலையில் கிம் திடீரென தனது பதவியை விட்டு விலகியுள்ளார். காரணம் அவரது கணவர் ரிச்சி மார் சில நாட்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டி உள்ளதால் கிம் உடனடியாக  நியூசிலாந்து சென்றுள்ளார்.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலையில் கிம் விலகியுள்ளது குறிப்பிடக்கது. அதுமட்டுமல்ல பதவி காலம் முடிவதற்குள் விலகும் 3வது வெளிநாட்டு பயிற்சியாளர் கிம்.இது குறித்து இந்திய பேட்மின்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், ‘ கிம்மின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால்தான் அவர் பதவி விலகியுள்ளார். கணவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் அவர்  நியூசிலாந்து சென்றுள்ளார். அவர் குணமாக 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது’ என்றார்.பயிற்சியாளர் விலகல் குறித்து சிந்து, ‘இந்த நிலையில் எனது பயிற்சியாளர் விலகியது எதிர்பாரதது. அவர் கணவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். அவருடன் எனக்கு நல்ல புரிதல் இருந்தது. இனியும் கடுமையாக உழைப்பேன்.  மற்றதை பயிற்சியாளர் கோபிசந்தும், பேட்மின்டன் சங்க நிர்வாகிகளும் பார்த்துக் கொள்வார்கள்’ என்றார்.

Tags : departure ,coach ,Korean , PV ,departure ,Korean coach ,Indus
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை