×

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜானி பேர்ஸ்டோ அதிரடி நீக்கம்

லண்டன்: நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணியில் இருந்து  ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார்.இங்கிலாந்து அணி அடுத்த மாதம் முதல்  நியூசிலாந்து சென்று அங்கு டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் அங்கு விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் நட்சத்திர ஆட்டக்காரர்  ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார். உலக கோப்பைக்கு பிறகு நடந்த ஆஷஸ் தொடரில்  ஜானியின் ரன் குவிப்பு வேகம் வெறும் 19.45யாக இருந்ததால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. அதனால் நியூசிலாந்து  தொடரில் ஜோஸ் பட்லர் வீக்கெட்கீப்பராக இருப்பார்.

அதுமட்டுமின்றி டெஸ்ட் அணியில்  டோம் சிபிலி, ஜாக் கிராலி ஆகியோர் முதல்முறையாக இடம் பெற்றுள்ளனர்.இது குறித்து இங்கிலாந்து அணி தலைமை தேர்வாளர் எட்வர்டு ஸ்மித், ‘ஜானி தன்னை மேம்படுத்திக் கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். அவர் மீண்டும் முழுத்திறனுடன் அணிக்கு வருவார். அதுமட்டுமல்ல நியூசிலாந்து உடனான டெஸ்ட  போட்டிகள் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  போட்டி கணக்கில் வராது’ என்றார்.

Tags : England ,Johnny Barstow ,Test squad ,Johnny Barstow Action Removal , England ,squad, Johnny Barstow ,Removal
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்