×

ஃபிபா விருது: சிறந்த வீரர் மெஸ்ஸி, வீராங்கனை மேகன்: இவர் யாரென தெரிகிறதா?

மிலன்: ஃபிபாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்காவின் மேகன் ராபினோவுக்கும் வழங்கப்பட்டன.ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(ஃபிபா) சார்பில் கால்பந்து விளையாட்டில், சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற ஃபிபா விழாவில்  சிறந்த வீரருக்கான விருதை  லியோனல் மெஸ்ஸி(அர்ஜென்டீனா), சிறந்த கோல்கீப்பருக்கான விருது லிவர்பூல் வீரர் அலிஸ்சன் பேக்கர்(பிரேசில்) ஆகியோருக்கு  வழங்கப்பட்டது. மெஸ்ஸி 6வது முறையாக  இந்த விருதை பெறுகிறார்.அதேபோல் சிறந்த வீராங்கனைக்கான விருதை வீராங்கனை மேகன் ராபினோ(அமெரிக்கா) பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டியில் அமெரிக்கா கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். சிறந்த  கோல்கீப்பருக்கான விருது சாரிவான் வீனெண்டல்(நெதர்லாந்து) பெற்றார்.
 
உலக கோப்பை வென்ற அமெரிக்க பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜில் எல்லீஸ்(இங்கிலாந்து), லிவர்பூல் கிளப் அணியின் பயிற்சியாளர் ஜூர்கன் க்ளோப்(ஜெர்மனி)  ஆகியோர் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுகளை பெற்றனர்.
நெகிழ வைத்த அம்மா: கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு மட்டுமின்றி சிறந்த கால்பந்து ரசிகருக்கும் ஃபிபா விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.  பிரேசிலின் சாவ்போலா மாநிலத்தைச் சேர்ந்த சில்வியா கிரெக்கோவும், அவரது 14வயது மகன் நிக்கோலசும்தான் சிறந்த ரசிகருக்கான விருதை பெற்றனர். பால்மீராஸ் கிளப் அணியின் தீவிர ரசிகையான சில்வியா அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் தனது மகனுடன் சென்று விடுவார். போட்டியின் போது மைதானத்தில் நடப்பதை ஒவ்வொன்றையும் மகனுக்கு விவரிப்பார். காரணம்  நிகோலஸ் பார்வையற்ற சிறுவன். மேலும் 5 மாதத்திலேயே குறைபிரசவத்தில் பிறந்தவன்.  சில்வியாவின் வளர்ப்பு மகன்.  தனது மகனுக்கு போட்டி குறித்து சில்வியா விளக்குவது 2 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உலகின் கவனத்தை ஈர்த்தனர். இப்போது சிறந்த ரசிகருக்கான விருதை தாயும், மகனும்  பெற்றது மிலன் அரங்கில் இருந்தவர்களை மட்டுமல்ல, உலக கால்பந்து ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Tags : Messi , FIFA Award, Messi, Best Player,,Know?
× RELATED 7,600 பேர் பயணிக்கும் 1,200 அடி நீள உலகின்...