×

இலங்கைக்கு கடத்திய 1 கோடி மதிப்பு கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலைப்பாலத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மரைன் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மண்டபம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 7 சாக்கு மூட்டைகளில்  இருந்த பதப்படுத்தப்பட்ட 350 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி. வேனில் இருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த லிங்கநாதன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடல் அட்டையை மண்டபம் வேதாளை பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்து, படகில் இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த போலீசார் கடல் அட்டயை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : 1 crore worth ,sea card seized
× RELATED அமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய்க்கு...